அண்ணன் தம்பிகள் ஹீரோவாக நடிக்கும் திருப்பதிசாமி குடும்பம்

thirupathy-samy-kudumbathaar

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் – திருப்பதிசாமி குடும்பம்.

இப்படத்தை சுரேஷ்சண்முகம் இயக்குகிறார். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு புதுமுக நடிகர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.

கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார்.

மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஒய்.எம்.முரளி

இசை – சாம் டி.ராஜ்

எடிட்டிங் – ராஜா முகமது

நடனம் – தினேஷ், ஹபீப்

ஸ்டன்ட் – பயர் கார்த்திக்

இணை தயாரிப்பு – திருப்பூர் கே.எல்.கே.மோகன்

தயாரிப்பு – பாபுராஜா, பி. ஜாஃபர் அஷ்ரப்

திருப்பதிசாமி குடும்பம் படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா என்ன சொல்கிறார்?

“சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலியில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்த நான் முதன் முதலாக எனது மகன்களை கதாநாயகர்களாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

படத்தை முடித்து தணிக்கைக்கு அனுப்பி யு சான்றிதழ் வாங்கிவிட்டோம்.

தணிக்கைக்குழுவினரால் பாராட்டையும் பெற்றுவிட்டோம்.

நான் ஏற்கெனவே அரசு, சத்ரபதி என்று இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன்.

இந்த படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பப் படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும்.

நாம் நமது வீட்டுக்கு பக்கத்தில் எதிரில் பார்க்கிற சராசரி அப்பாதான் திருப்பதிசாமி.

பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் ஓடிப்போய் உதவி செய்யும் குணம்.

தன்னுடன் வேலை செய்யும் ஒருவனது பிரச்சனைக்கு ஆதரவு தரும் அன்புள்ளம் கொண்ட அமைதியான அவருக்கு மனைவி மகன்கள் மகள் என நேர்மையாக வாழும் குடும்பம்.

அப்படிப்பட்ட அவர்களுக்கு அதிகார பலம் கொண்ட ஒருவனது அடாவடியால் ஏற்படும் பிரச்சனை.

ஆட்பலம், அதிகார பலம் கொண்ட அவனையும் அவனது அராஜகத்துக்கு துணை போகும் அரசியல்வாதியையும் மூளை பலத்தால் திருப்பதிசாமியின் மகன்களான இருவரும் எப்படி வெல்கிறார்கள் என்பது தான் கதை.

திருப்பதிசாமியாக ஜெயன் மகன்களாக எனது மகன்கள் ஜே.கேயும், ஜெயகாந்தும் நடித்திருக்கிறார்கள்.

மகன்கள் ஹீரோவாக நடிப்பதால் கதையை மீறி எதையும் திணிக்கவில்லை.

கதைக்குண்டான கதாபாத்திரங்களாகத்தான் வருகிறார்கள்” என்கிறார் தயாரிப்பாளர் பாபுராஜா.

திருப்பதிசாமி குடும்பம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.