அங்கே ‘வோட்டர்’… இங்கே ‘குறள் 388’

vishnu-manchu-1

தெலுங்கில் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு.

இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வோட்டர்’ என்ற படம் தமிழில் ‘குறள் 388’ என்ற பெயரில் வெளியாகிறது.

ஜி.எஸ்.கார்த்தி இயக்கும் இப்படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.

மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி, நாசர் பிரகதி, முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், எல்.பி.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

இசை – எஸ்.எஸ்.தமன்

வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்

கலை – கிரன் மன்னி

திரைக்கதை – கே.எல்.பிரவீன்

தயாரிப்பு – ஜான் சுதீர்குமார் புதோடோ

குறள் 388’ படம் பற்றி இயக்குநர் ஜி.எஸ்.கார்த்தி கூறியதாவது…

“உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப் படாத கருத்துக்கள் எதுவும் இல்லை.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

என்ற 388 ஆவது குறளின் கருத்துக்கள்தான் படத்தின் கரு.

பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக படம் உருவாகிறது.”