தியேட்டர் அதிபர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்…

kamala-theater-chennai

QUBE, UFO, PXD போன்ற டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரவடைர்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலித்து வரும் தொழில்நுட்ப கட்டணங்களை குறைக்கக் கோரி கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.

எனவே மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிடுவதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது!

இதனால் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், தமிழக அரசிடம் சில கோரிக்கைகள் வலியுறுத்தியும் தியேட்டர் அதிபர்கள் சங்கம் மார்ச் 16-ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வருகிற 16-ஆம் தேதி முதல் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் சினிமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான FEFSI அமைப்பின் ஒப்புதலோடு தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடைபெறாத சூழ்நிலை உருவாகியுள்ளது!

இதற்கிடையில் திரையரங்கு அதிபர்களுக்கு கிடுக்கிப்பிடிபோடும் பல்வேறு நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

 

tamil-film-producer-council1

 

tamil-film-producer-council2