அட்டகத்தி ஹீரோக்களின் அச்சம்

thaanaa-serndha-koottam-stills-003

தனியார் சேனல் தொகுப்பாளினிகள் இரண்டு பேர்,  நடிகர் சூர்யாவைப் பற்றிய தரக்குறைவான கருத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

அந்த தனியார் சேனலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அதோடு,  அந்த  தனியார்  சேனல்  அலுவலகம்  முன்பு   போராட்டமும்  நடத்தினர்.

இதை அறிந்த நடிகர் சூர்யா, ‘‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும்,சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற!’’ என்று ட்வீட் செய்தார். ரசிகர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

இத்தனை பிரச்சனைகள் நடந்தநிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகினர் கருத்து சொல்லவில்லை என்பதுதான் கொடுமை. எங்கே கருத்து சொன்னால் அந்த சேனல் நம்மை ஒதுக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக வேடிக்கைப் பார்த்தனர்.

அட்டகத்திகளின் அச்சத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.