தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடை வருமா?

suriya-thaanaa-serndha-kutham

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்க நயன்தாராவின் காதலரான விக்‌னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று போஸ்ட்புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன்முதலாக இணைந்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்திப்படத்தின் தழுவல் என்ற தகவல்கள் வெளியாகின.

இதை விக்னேஷ்சிவன், சூர்யா தரப்பினார் மநுத்தனர்.

இந்நிலையில், சிலதினங்களுக்குமுன் இப்படத்தின் டீஸர் வெளியானது.

அதைப் பார்க்கும்போது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்திப்படத்திலிருந்து கதையை சுட்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஸ்பெஷல் 26 ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பல வருடங்களுக்கு முன்பே வாங்கி வைத்திருக்கிறார் நடிகர் தியாகராஜன்.

தன்னுடைய மகன் பிரசாந்தை ஹீரோவாக வைத்து தமிழில் ரீமேக் செய்யத்திட்டமிட்டிருப்பதாக சில மாதங்களுக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் தியாகராஜன்.

அப்போது ஸ்பெஷல் 26 படத்தை உல்டா பண்ணி தானா சேர்ந்த கூட்டம் படம் உருவாகும் தகவலை அவரிடம் தெரிவித்தபோது, அப்படி செய்தால் நீதிமன்றத்தை நாடுவேன் என்று தெரிவித்தார்.

தற்போது வெளியான டீசரின் மூலம் தானா சேர்ந்த கூட்டம் படம் ஸ்பெஷல் 26 படத்தின் உல்டா என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை வெளியிட தடை கேட்டு நடிகர் தியாகராஜன் வழக்குத் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மீது மதுரை அன்புவிடம் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா 32 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதால், அதை செட்டில் பண்ணாமல் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாது என்கின்றனர் படத்துறையினர்.