தீபாவளியும் இல்லை…. பொங்கலும் இல்லை… இடையில் பாயும் சிங்கம் – 3

s3-this-dec-16th-suriya_offl-jharrisjayaraj-kegvraja-rajsekarpandian-2d_entpvtltd-sakthivelan_b-udhayament

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு பாகங்களும் வணிகரீதிய்ல மிகப்பெரிய வெற்றியடைநந்தன.

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் கைகோர்க்க வைத்து காசு பார்ப்பதுதான் திரையுலக வணிக தந்திரம் அல்லது சூத்திரம்.

சிங்கம், சிங்கம் -2 படங்கள் சூப்பர்ஹிட்டானதால் அதன் மூன்றாம் பாகத்தை தயாரிக்க பல முன்னயி நிறுவனங்கள் போட்டிபோட்டன.

எதிர்பார்த்ததுபோலவே சூர்யாவின் உறவினரான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா சிங்கம் -3 படத்தை  தயாரிக்க ஆரம்பித்தார்.

எஸ்-3 என பெயரிடப்பட்ட  இப்படத்தில், முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவோடு முந்தைய பாகத்தில் நடித்த ஸ்ருதிஹாசனும் இப்படத்தில்  இணைந்து நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்துக்கும் ப்ரியனே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எஸ்-3 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது.

இந்த செய்தியை தயாரிப்புநிறுவனத்திலிருந்து யாரும் உறுதி செய்யவில்லை என்றாலும், கார்த்தி நடித்த காஷ்மோரா தீபாவளிக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டநிலையில்,  எஸ்-3 படத்தையும் எப்படி தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வியின் அடிப்படையில் எஸ்-3 பொங்கலுக்குத்தான் வெளிவரும் என சிலர்ஆருடம் சொல்ல ஆரம்பித்தனர்.

இப்படியான யூகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் ‘எஸ்- 3’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எஸ்-3 படம் தீபாவளிக்கு வெளியாகுமா? பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? என சூர்யாவின் ரசிகர்கள் தவித்துப்போயிருந்தனர்.

அவர்களின் வயிற்றில் பால்வார்ப்பதுபோல் டிசம்பர் 16 அன்று ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.