ஸ்டண்ட் யூனியன் பொன்விழாவில் கலா மாஸ்டரின் டான்ஸ்…

stunt-union-golden-jubilee-year-celebration

திரைப்படத்துறையில் 25க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமான சங்கம்… 650 உறுப்பினர்களை கொண்ட ‘ஸ்டண்ட் யூனியன்’ என்று சொல்லப்படுகிறது சண்டைக்கலைஞர்கள் சங்கம்.

சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள்!

உயிரை பணயம் வைத்தும், உயிரைக் கொடுத்தும் இவர்கள் பணியாற்றியதால்தான் இங்கே பல ஆக்ஷன் ஹீரோக்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இவர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ ஸ்டண் யூனியனை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட  ’ஸ்டண்ட் யூனியன்’  பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

பொன்விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பொன்விழா வருகிற இந்த விழாவில் மூத்த ஸ்டண்ட் கலைஞர்களை கௌரவிக்க இருக்கிறார்கள்.

அதோடு,  ஸ்டண்ட் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள், நடன இயக்குனர் கலா மாஸ்டர் தலைமையில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகள் ஆகிய அம்சங்களும் அந்த விழாவில் இடம்பெற உள்ளன.

இந்த விழாவின் இயக்குநராக நடிகரும் கலா மாஸ்டர் குழுவைச் சேர்ந்தவருமான  மானாட மயிலாட புகழ் கோகுல் பணியாற்றுகிறார்.

சுமார் 6 மணிநேரம் நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு இந்திய திரையுலகிலுள்ள அனைத்து கலைஞர்களையும் அழைக்க திட்டமிட்டிருப்பதாக ஸ்டண்ட் யூனியனின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அவருடன் ஸ்டண்ட் யூனியனின் தலைவர் அனல் அரசு, செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான், துணைத்தலைவர் ராக்கி ராஜேஷ் முதலோனோரும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.