பரபர திரைக்கதையில் போங்கு…

bongu

ஆர்.டி.இன்ஃபினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் – போங்கு.

சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த  நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர்  மதூர் பண்டார்கர் இயக்கிய காலண்டர் கேர்ள்ஸ் உட்பட இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார்.

மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், மனிஷா ஸ்ரீ, ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி   ஒளிப்பதிவு செய்கிறார்.

கபிலன், தாமரை, மதன்கார்க்கி  எழுதிய பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்ய, ராஜமோகன்    கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிகிறார். கல்யாண் , பாப்பி  நடனம் அமைக்கிறார்கள்.

போங்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தாஜ். இவர் பிரபல கலை இயக்குநர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

போங்கு படம் பற்றி இயக்குநர்  என்ன சொல்கிறார்?

“போங்கு படம் டிராவலிங் பற்றிய படம்..

சாலைகளில் அதுவும் நேஷ்னல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பரபரன்னு பறக்கும்…

நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி கேரக்டர் அப்படியே பொருந்தி போய் விட்டது.

சரியாக சொல்லப்போனால் சதுரங்க வேட்டையை தாண்டுவது போல இந்த கதாபாத்திரத்தில் அவர் ஜொலிப்பார்..

படம் விரைவில் வெளியாக உள்ளது..

நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

அந்த ஆதரவு போங்கு படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார் இயக்குநர் தாஜ்.