கவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…! – ஓவியா அறிவிப்பு

oviya-snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழை அறுவடை செய்தவர் ஓவியாதான்.

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா அதன் பிறகு தமிழில் எத்தனையோ படங்களில் நடித்தாலும், இப்படியொரு புகழ் அவருக்குக் கிடைக்கவே இல்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் வசித்தபோது, மற்றவர்கள் அவரை தனிமைப்படுத்தியதும், அவமானப்படுத்தியதும் மக்கள் மத்தியில் இரக்கத்தை சுரக்க வைத்தது.

அதுவே அவருக்கான ஆதரவு அலையாக மாறியது.

ஓவியா ஆர்மி என ரசிகர்கள் திரளுமளவுக்கு தற்போது ஓவியாவுக்கு மிகப்பெரிய பாப்புலாரிட்டி.

அதை பணம் பண்ணும் ஆசை ஓவியாவுக்கு இருக்கிறதோ இல்லையோ… மற்றவர்களுக்கு இல்லாமல் இருக்குமா?

கோடம்பாக்கத்தில் பூஜைபோடப்படும்நிலையில் உள்ள படங்களின் கதாநாயகி யார் என்று கேட்டால் ஓவியா என்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியா உடன் வசித்த கவிஞர் சினேகன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும், அந்தப் படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்க இருப்பதாகவும் தகவல்.

இந்தப் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிப்பதாக அதிகாரபூர்வ செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தி நமக்குக் கிடைப்பதற்கு சற்று முன்தான் ஓவியா உடன் பேசினோம். அப்போது இப்படியொரு படத்தில் நடிப்பதாக அவர் சொல்லவே இல்லை.

ஓவியா, மக்களின் பிக்பாஸ் சினேகன் நடிக்கும் படம் என்ற செய்திக்குப் பிறகு மீண்டும் ஓவியாவிடம் கேட்டால், இல்லை என்றே சொல்கிறார்.

யாரு சொல்றது உண்மைன்னு தெரியலையே…