டென்ஷனாக்கிய சந்தானம்… பதட்டத்தில் சிவகார்த்திகேயன்…

santhanam-1

காமெடி நடிகர் சந்தானத்துக்கு தமிழில் பிடிக்காத பெயர் உண்டு என்றால்…. அது சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் சந்தானமும், சிவகார்த்திகேயனும்தான் சினிமாவில் பெரிய அளவில் வெற்றியடைந்தனர்.

மன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகமாகி பல படங்களில் காமெடியனாக நடித்து அதன் பின்னர் முன்னணி காமெடியனாக உயர்ந்து சில வருடங்களுக்கு முன் ஹீரோவானவர் சந்தானம். ஆனால், தனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்து இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக நடிக்கத் துவங்கி, ஆறேழு படங்களிலேயே பெரிய நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.

அதனாலேயே சிவகார்த்திகேயனை சந்தானத்துக்கு அறவே பிடிக்காது.

சந்தானத்தின் எரிச்சலுக்கு இது மட்டும் காரணமில்லை. தனுஷ் நடித்த 3 படத்தில் காமெடியன் வாய்ப்பு முதலில் சந்தானத்தையே தேடி வந்தது.

சிம்புவின் விசுவாசியான சந்தானம், 3 படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதை சொல்வதற்கே 3 மாசம் இழுத்தடித்திருக்கிறார். அதன் பிறகே விஜய் டிவியின் தொகுப்பாளரான சிவகார்த்திகேயனை அழைத்து 3 படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார் தனுஷ்.

நாம் நடிக்க வேண்டிய படத்தில் நடித்து இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்டாரே என்று பொசுங்கும் சந்தானம், அதனாலேயே சிவகார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை தன் அருகில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்.

சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து இருப்பது பழைய கதை.

இந்தநிலையில்தான் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருடைய படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவிருக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட வேலைக்காரன் படம் இரண்டுமுறை தள்ளி வைக்கப்பட்டு இறுதியாக டிசம்பர் 22 வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், சந்தானத்தின் ‘சக்கப்போடு போடு ராஜா’ படமும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனை நேரடியாக வம்புக்கு இழுத்திருக்கிறார் சந்தானம். இன்னொருபக்கம் சந்தானம் நடித்த சக்கப்போடு போடுராஜா படம் வெளிவருவது சிவகார்த்திகேயன் தரப்பை பதட்டமடைய வைத்திருக்கிறது.

போட்டி ஏதுமின்றி தனியாக களத்தில் குதித்து கரன்ஸிகளை அள்ளலாம் என்ற கனவில் இருந்த சிவகார்த்திகேயன் தரப்புக்கு சந்தானம் வைத்த ஆப்பு அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.