சிவகார்த்திகேயனுக்கு 40 கோடி சம்பளம்…!

sivakarthikeyan

ரஜினி முருகன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய 5 கோடி சம்பளத்துடன் கூடுதலாக 50 லட்சம் கொடுத்தால்தான் அந்தப் படம் ரிலீஸாகும் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்போது கடும் பண நெருக்கடியில் இருந்த சிவகாத்திகேயனுக்கு பெரும் தொகையைக் கொடுத்து உதவினார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்.

அதற்கு நன்றிக்கடனாக அவரது தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

அன்றைக்கு ஞானவேல் கொடுத்த பணத்தினால்தான் ரஜினி முருகன் படமே திரைக்கு வந்தது.

ரஜினி முருகன் படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்றதால் சிவகார்த்திகேயனின் ரேன்ஜ் மாறிப்போனது.

சினிமாவில் வெற்றி கிடைத்த பிறகு பழசை மறந்துவிடுவார்கள் அல்லவா?

சிவகார்த்திகேயனும் இதற்கு விதிவிலக்கில்லை.

இக்கட்டான நேரத்தில் தனக்கு உதவி செய்ததை மறந்து, ஸ்டுடியோக்ரீன் ஞானவேலுக்கு கால்ஷீட் தராமல் தொடர்ந்து சொந்தப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடைபெற்று ஞானவேல்ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தே தீர வேண்டும் என்று சிவகார்த்திகேயனுக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது ரெமோ படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், அடுத்து ஞானவேல்ராஜாவுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரோ அதன் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

வேலைக்காரன் படத்துக்குப்பிறகாவது ஸ்டுடியோக்ரீன் படத்தில் நடிப்பார் என்று பார்த்தால், இம்முறையும் அவருக்கு அல்வா கொடுத்தார்.

மோகன் ராஜாவின் படத்தை தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 16) குற்றாலத்தில் தொடங்குகிறது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் தன்னுடைய 24 ஏ.எம் ஸ்டுடியோ பேனரிலேயே, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தை முடித்த பிறகே ஸ்டூடியோ க்ரீன் ஞானவேலு தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.

விவேகம் படத்தின் இயக்குநர் சிவா இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெமோ படத்தில் நடிப்பதற்குமுன்பே சிவாவை சந்தித்து தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அந்தப்படத்துக்கு என்ன சம்பளம் கேட்டாலும் தருகிறேன் என்று சிவகார்த்திகேயன் சொல்லியும், வேதாளம் படத்தை முடித்துவிட்டு விவேகம் படத்தை இயக்க இருப்பதால் தற்போது முடியாது என்று மறுத்தாராம் சிவா.

தற்போது விவேகம் படம் வெளியாக உள்ளநிலையில் மீண்டும் சிவாவை தேடிப்போன சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் தான் நடிக்க உள்ள படத்தை இயக்கும்படி சிவாவிடம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘சிறுத்தை’ படத்தை அடுத்து தங்களுடைய நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கும்படி ஏற்கனவே சிவாவுடன் ஒப்பந்தம் போட்டு வைத்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

அதனால் சிவாவை இயக்குநராக வைத்து படம் தயாரிப்பதில் ஞானவேலுவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 40 கோடி சம்பளம். படத்தை இயக்கும் சிவாவுக்கு 10 கோடி சம்பளம்.