‘சிவா மனசுல புஷ்பா’ படத்தில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த காட்சி!

siva-manasula-pushpa

ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான சிவா மனசுல சக்தி படம் வெற்றியடைந்தது. எஸ்.எம்.எஸ். என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்ட அந்தப் படத்தின் சாயலில் ‘சிவா மனசுல புஷ்பா’  என்ற பெயரில் தற்போது ஒரு படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வாராகி நடிக்கிறார்.
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பல தொலைக்காட்சித்தொடர்களை இயக்கிய  அருந்தவராஜா திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்களில் பாராளுமன்ற கட்டிடம் இடம்பெற்றுள்ளதை வைத்தே இது சர்ச்சைக்குரிய அரசியல்படkக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
‘சிவா மனசுல புஷ்பா’  படம் குறித்து வாராகி அதை உறுதி செய்கிறார்.
இந்தக் கதை  கற்பனை அல்ல, நிஜத்தில் நடைபெற்ற சில சர்ச்சைக்குரிய சம்பவங்களின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும்போது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும்” என்கிறார்.
அதாவது தமிழக எம்.பி.க்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இருவருக்கும் இடையில் உள்ள ‘உறவை’ப் பற்றிய படமாம் இது.
டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த காட்சி சிவா மனசுல புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
இந்தக்காட்சி மட்டுமல்ல, திருச்சி சிவா, சசிகலா புண்பா தொடர்பான வேறுபல சம்பவங்களும் இந்தப்படத்தில் காட்சிகளாக்கப்பட்டிருக்கின்றன.
இதன் காரணமாக  சம்மந்தப்பட்டவர்கள் சிவா மனசுல புஷ்பா படத்துக்கு கோர்ட்டில்தடை வாங்கிவிட வாய்ப்புள்ளது என்பதால், சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காமெடி நடிகர்  வாராகியை அழைத்து படத்துக்கு  சென்சாரில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலவழிகளை சொல்லிக் கொடுத்திருக்கிறாராம்.