சிவா மனசுல புஷ்பா… திருச்சி சிவா, சசிகலா புஷ்பா பற்றிய கதையா…?

rithik

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார்.

சிவா மனசுல புஷ்பா படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி ,

“பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும்.

மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன்.

யாரும் இதில் துணிந்து நடிக்க மறுத்தார்கள்.

ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது.

இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள்.

இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று சொன்னார்.

திமுக எம்.பி. திருச்சி சிவாவும், அதிமுகவை சேர்ந்த பெண் எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருப்பது போன்ற அந்தரங்க புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் சமூக வலை தளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வெளியாகி சந்தி சிரித்தன.

சிவா மனசுல புஷ்பா என்ற இந்தப் படத்தின் டைட்டிலும், “இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள்.” என்று இயக்குநர் வாராகி சொல்வதையும் வைத்துப் பார்த்தால் திருச்சி சிவா- சசிகலா புஷ்பா கதை போல்தான் தோன்றுகிறது.