வெளிநாட்டுக்காதலருடன் கைகோர்த்து வந்த ஸ்ருதி….

aadhav-weds-vinodhnie-reception

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிசனின் காதல்கதையை படமாக எடுத்தால் இரண்டு மூன்று பாகங்கள் எடுத்தாக வேண்டும். இல்லை என்றால்… வேறுவழியே இல்லை. மெகாசீரியல். அந்தளவுக்கு ஸ்ருதிஹாசனின் ஆட்டோகிராஃபின் பக்கங்கள் அதிகம்.

நடிக்க வருவதற்கு முன்பே பலபேருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட ஸ்ருதிஹாசன், நடிகையான பிறகு தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தியபோது நடிகர் சித்தார்த் உடன் நெருக்கமாக இருந்தார்.

ஏற்கனவே மனைவியை விவகாரத்து செய்துவிட்டு சிங்கிளாக இருந்த சித்தார்த்தும் ஸ்ருதிஹாசனும் ஹைதராபாத்தில் தனிக்குடித்தனமே நடத்தி வந்தனர்.

பின்னர் சித்தார்த்துக்கு குட்பை சொல்லிவிட்டு தனுஷ் உடன் நெருக்கமானார்.

தனுஷ் – ஸ்ருதி உறவு இரண்டு குடும்பத்திலும் பிரளயத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மும்பையில் ப்ளாட் வாங்கி அங்கேயே செட்டிலானார் ஸ்ருதிஹாசன்.

இதற்காகவே அடிக்கடி மும்பை சென்று ஸ்ருதிஹாசனுடன், காதலாகி கசிந்துருகிக் கிடந்தார் தனுஷ்.

ஒருகட்டத்தில் தனுஷுடன் மனக்கசப்பு ஏற்பட்டதும், சிம்புவின் காதல்வலையில் சிக்கினார்.

சிம்பு – ஸ்ருதிஹாசன் காதல்கதை அதிகநாட்கள் நீடிக்கவில்லை.

aadhavwedsvinodhnie-33

அவரை உதறிவிட்டு சில காலம் சிங்கிளாக இருந்த ஸ்ருதிஹாசன், லண்டனைச் சேர்ந்த நாடக நடிகருமான மைக்கேல் கோர்சலுடன் சுற்ற ஆரம்பித்தார்.

இருவரும் காதலித்துவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், அடிக்கடி இந்தியாவுக்கு வந்து ஸ்ருதிஹாசனுடன் ‘பழகி’விட்டு சென்றார் மைக்கேல் கோர்சல்.

aadhav-weds-vinodhnie-1

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனிடம் மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் அடிபட்டன.

இந்நிலையில், கண்ணதாசனின் பேரனும் சில படங்களில் நடித்தவருமான ஆதவ் கண்ணதாசனின் திருமணத்துக்கு தன் காதலர் மைக்கேல் கோர்சலுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

திருமண வரவேற்புக்கு கோட் சூட் என காதலரை மாடர்ன் கெட்டப்பில் அழைத்துவந்த ஸ்ருதிஹாசன், இன்று (06.12.2017) நடைபெற்ற திருமணத்துக்கு பட்டுவேட்டி சட்டை அணிவித்துல் காதலரை அழைத்து வந்திருந்தார்.

இதில் கூடுதல் ஆச்சர்யம் என்ன தெரியுமா?

கூடவே தன் அப்பா கமல்ஹாசனையும் அழைத்துவந்ததுதான்.

திருமண மண்டபத்தில் ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் காதலர் மைக்கேல் கோர்சல் சகிதம் ஸ்ருதி அமர்ந்திருந்ததை திருமணத்துக்கு வந்த மொத்தக்கூட்டமும் வேடிக்கை பார்த்தது.

கல்யாண மண்டபத்தில் நடந்த திருமண சடங்குகளை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஙே என முழித்தபடி மைக்கேல் கோர்சல் அமர்ந்திருந்த காட்சியைப் பார்க்கணுமே… செம காமெடி.