இடத்தை காலி பண்ணுங்கள்…! – சூர்யா பட ஷூட்டிங்குக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

suriya

சிங்கம்-3 படத்தை அடுத்து தற்போது தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படத்தை நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை, கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் நடைபெற்று வருகிறது.

சூர்யா உள்ளிட்ட கலைஞர்கள் பங்குபெறும் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பாரதிதாசன் காலனியில் குடியிருப்பவர்களை கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

அங்கு குடியிருக்கும் மக்கள் வழக்கமாக பயன்படுத்தும் பாதையை பயன்படுத்தவிடாமல் தடுப்புகளை அமைத்து அழிச்சாட்டியம் செய்துள்ளனர்.

இது பற்றி ஆரம்பத்தில் தங்கள் அதிருப்தியை தெரிவித்த மக்களை படக்குழுவினர் சட்டைபண்ணவில்லை.

தொடர்ந்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

பாரதிதாசன் காலனியில் குயிருப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் அரசு ஊழியர்கள்தான்.

இன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பியவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் அராஜகம்.

அதாவது காலனியிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு நான்கு பக்கமும் சாலையை அடைத்தபடி படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

அலுவலகம் செல்ல இடையூறு ஏற்படுத்தியதைக் கண்டு கொதித்துப்போன பாரதிதாசன் காலனி பொங்கி எழுந்துவிட்டனர்.

இங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது… உடனே இடத்தை காலி பண்ணுங்கள் என்று சத்தம்போடத் தொடங்கினர்.

மக்களின் எதிர்ப்புக்குரல் வலுக்க ஆரம்பித்ததும் இயக்குநர் விக்னேஷ்சிவனும், சூர்யாவும் கேரவானுக்குள் புகுந்து கொண்டுவிட்டனராம்.

மக்களின் கோபம் காரணமாக தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு பாரதி தாசன் காலனியில் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.