ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ‘செயல்’

seyal

சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார்.

மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – வி.இளையராஜா

இசை – சித்தார்த்விபின்

எடிட்டிங் – ஆர்.நிர்மல்

பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்

தயாரிப்பு – சி.ஆர்.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ரவி அப்புலு என்ன சொல்கிறார்…

இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் ‘நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா’ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.

சென்னையில் ‘டே மாமா விட்டுத் தள்ளு இதுக்கேண்டா இவ்வளவு டல்லு’ என்ற பாடல் காட்சி முழுக்க முழுக்க சென்னையை பற்றிய பாடலான இதில் ராஜன்தேஜேஸ்வர் மற்றும் அவரது நண்பரான ஆத்தியா கோபி மற்றைய நண்பர்கள் பங்குபெற பாபாபாஸ்கர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குநர் ரவி அப்புலு.