சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் தியேட்டருக்கு வருமா? Comments Off on சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் தியேட்டருக்கு வருமா?

சந்தானம் ஹீரோவாக நடித்து, கடந்தவாரம் வெளியான சக்கப்போடுபோடுராஜா படம் மொக்கப்போடுபோடுராஜாவாகிவிட்டது.

டிரைடண் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற விநியோகஸ்தர் இந்தப்படத்தை 10 கோடி அட்வான்ஸ் கொடுத்து ரிலீஸ் செய்தார்.

3 கோடி கூட ரிடர்ன் வரவில்லை. எனவே 7 கோடியை திருப்பிக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சந்தானம்.

சக்கப்போடுபோடுராஜா படத்தின் படு தோல்வியினால், இனிமேல் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களை எடுத்துக் கொண்டு இந்தப்பக்கம் வராதீர்கள் என்று சொல்லும்நிலைக்கு தியேட்டர்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் சர்வர் சுந்தரம் படம் தியேட்டருக்கு வருமா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் கூத்து உட்பட பல படங்களைத் தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரித்த இந்தப் படத்துக்கு இன்னொரு தலைவலியும் உண்டு.

இதே நிறுவனத்தின் தயாரிப்பான ‘உள்குத்து. படத்தின் பெயரில் அதன் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் பலரிடமும் கடன்வாங்கியிருந்தார்.

அது தொடர்பான பிரச்சனை காரணமாக உள்குத்து படம், வருடக்கணக்கில் ரிலீசாகாமலே இருந்தது. செல்வகுமாரிடமிருந்து உள்குத்து படத்துக்கு பைனான்ஸ் செய்த விட்டல் என்பவர் படத்தை அண்டர்டேக் பண்ணி தற்போது படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்.

ஜெ.செல்வகுமார் வாங்கிய கடன் பிரச்சனையால் ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’தயாரித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரே படத்தைக்காட்டி பலரிடம் கடன் வாங்கிய பிரச்சனையினால் சர்வர் சுந்தரம் படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று சொல்கின்றனர்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
பெண்மையை உணர்த்தும் பாடலை இரு மொழிகளில் பாடிய பிரியாங்கா

Close