செம படத்தை ரொம்ப எதிர்பார்த்து வரவேண்டாம். – பகீர் கிளப்பிய பாண்டிராஜ்

sema-stills-001

இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், அர்த்தனா பினு கதாநாயகியாகவும் நடித்துள்ள செம படம் மே 25-ஆம் தேதி வெளியாகும் நிலையில் அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பண்டிராஜ் ‘செம’ கதை எப்படி உருவானது என்பது பற்றி விளக்கினார்…

‘‘என்னுடைய உதவியாளரும், ‘எங்கிட்ட மோதாதே’ படத்தோட இயக்குனருமான ராமு செல்லப்பா வாழ்க்கையில ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை வச்சு எழுதப்பட்ட கதை தான் ‘செம’.

இந்த கதையை வள்ளிகாந்த் என்னிடம் சொன்னார்.

எல்லோரது வாழ்க்கையிலயும் கல்யாணம், பொண்ணு பார்க்குற படலம் இருக்கும்.

அப்படி பொண்ணு பார்க்குற படலத்துல நடக்கிற இண்ட்ரஸ்டிங்கான விஷயம்தான் இந்த படம்.

பொண்ணு பார்க்க போன ஒருவர் தனக்கு அந்த பொண்ணு ஓகே ஆகாதுனு நினைச்சுக்கிட்டிருக்கிற நேரத்துல அந்த பொண்ணும், பொண்ணு வீட்டுக்காரங்களும் ‘ஓகே’னு சொல்லிட்டாங்க! அவங்க ஓகே சொன்னதும் பையன் வீட்டுக்காரங்க ஷாக் ஆயிட்டாங்க! அதன் பிறகு அந்த கல்யாணம் நடக்குற தருணத்துல எதிர்பாரத விதமா கல்யாணம் நின்னுப்போச்சு.

அதற்கப்புறம அந்த புள்ள எப்படி கல்யாணம் பண்ணான் என்பதை சொன்னபோது காமெடியாக இருந்துச்சு! இந்த சம்பவங்களை வச்சு உருவாக்குன கதை தான் ‘செம’.

இந்த படத்துக்கு ரொம்பவும் எதிர்பார்த்தெல்லாம் வரவேண்டாம். ஒரு ஜாலியான கதை! சும்மா இரண்டு மணிநேரம் சிரிச்சுக்கிட்டு ஜாலியா பார்க்க கூடிய படமாக இருக்கும்.

இதுல யோகி பாபுவோட காமெடி போர்ஷன்ஸ் படு ஜாலியாக இருக்கும்!

படத்துக்கான வசனங்களை நான் எழுதியுள்ளேன். அதோட இயக்குநர் வள்ளிகாந்தும், யோகி பாபுவும் கூட அவங்க பாணியில சில வசனங்களை எழுதியிருக்காங்க!’ இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார் பாண்டிராஜ்!