ரசிகர்களை ஏமாற்றிய சீமராஜா…!

seemaraja_sivakarthikeyan_samantha 001

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினி முருகன்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான சீமராஜா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை காசு பண்ணுவதற்காக சட்டத்துக்குப் புறம்பாக சென்னையில் பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி, 6 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் அதிகாலையிலேயே தியேட்டருக்கு படையெடுத்தனர்.

ஆனால் அதிகாலையில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்புப் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அதாவது குறிப்பிட்டபடி செப்டம்பர் 13 அன்று அதிகாலையில் சீமராஜா படம் ரிலீஸாகவில்லை.

சீமராஜா படத்தின் மீது வாங்கப்பட்ட 15 கோடி கடனை சினிமா பைனான்சியர்களுக்குத் திருப்பிக்கொடுக்காததினால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இதன் காரணமாக செப்டம்பர் 12 அன்று வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

செப்டம்பர் 13 அன்று படம் ரிலீஸ் என்ற சூழலில் அன்றைய தினம் 5 மணிக்குத்தான் பிரச்சனைகள் தீர்ந்தன. அதாவது தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கொடுக்க வேண்டிய 15 கோடி கடனை தானே தருவதாக சிவகார்த்திகேயன் கடன்பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்த பிறகே பிரச்சனை தீர்ந்தது.

பஞ்சாயத்து தீர்ந்த பிறகு ஒருவழியாக காலை 8 மணிக்கு சீமராஜா திரையிடப்பட்டது.

திட்டமிட்டபடி சீமராஜா தியேட்டருக்கு வராததினால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.