சீமராஜா படத்தின் முதல் நாள் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா?

seemaraja_sivakarthikeyan_samantha 005

வருத்தப்படாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் படங்களைத்தொடர்ந்து பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13 அன்று வெளியான இப்படத்துக்கு ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

ஊடகங்களின் விமர்சனங்களும் ‘சீமராஜா’ படத்துக்கு சாதகமாக இல்லை.

இத்தனைக்கும் விளம்பரத்துக்கு மட்டும் 8 கோடி செலவிடப்பட்டது.

இந்நிலையில் சீமராஜா படத்தின் தமிழ்நாடு திரையரங்க முதல் நாள் வசூல் 13.5 கோடி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

“சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்” என்று மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புக்கு மாறாக, சீமராஜா படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 7 கோடி என்று விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர்காரர்கள் மத்தியில் பேச்சு தகவல் பரவியது.

தயாரிப்பாளர் சொல்வதற்கும் விநியோகஸ்தர்கள் சொல்வதற்கும் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறதே? என்ற சந்தேகத்தில் டிரேடிங் வட்டாரத்தில் நம் விசாரணையைத் தொடங்கினோம்.

கிடைத்த தகவல் என்ன தெரியுமா?

சென்னை சிட்டி – 1.50 கோடி

செங்கல்பட்டு – 2.10 கோடி

வட, தென் ஆற்காடு – 1.40 கோடி

கோவை – 1.70 கோடி

மதுரை – 1.50 கோடி

சேலம் – 1.00 கோடி

திருச்சி – 70 லட்சம்

திருநெல்வேலி – 50 லட்சம்

ஆக தமிழ்நாட்டில் சீமராஜா படத்தின் முதல்நாள் மொத்தவசூல் – 10 கோடியே 40 லட்சம்.

இரண்டாவது நாள் மொத்த வசூல் சுமார் 6 கோடி என்று தகவல்.