சவரக்கத்தி எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை – இயக்குநர் மிஷ்கின்

Actor Mysskin in Savarakathi Movie Stills

சவரக்கத்தி படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

அப்படம் பற்றி மிஷ்கின் என்ன சொல்கிறார்?

“நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.

அவர்ளைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்.

“சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை.

இந்தப்படத்தில் ராம் “பிச்சை” என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஒரு பார்பர் கதாபாத்திரம்.

நான் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம்.

நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி, அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும்.

ஒரு நாளில் நிகழும் கதை இப்படம்.

“சுமத்ரா” என்ற கேரக்டரில், ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார் பூர்ணா.

க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி.

முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு நகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்தப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதனால் நான் மங்கா கேரக்டரில் நடித்துள்ளேன்.

நான் இந்தப்படத்தில் ரவுடியாக நடித்துள்ளேன்.

இப்படி பொய்யையும், ரவுடித்தனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம்.

பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டதுதான் சவரக்கத்தி.

இந்தப்படத்தில் இரண்டு டைரக்டர்கள் நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக டைரக்ட் செய்துள்ளார்.

இந்தப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும்.

“கத்தி எதுக்கு தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம்.

இந்தப்படத்தில் 2 பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.”