தியேட்டரில் சினிமா பார்ப்பது சமூகக்கடமை…! – இயக்குநர் மிஷ்கின் Comments Off on தியேட்டரில் சினிமா பார்ப்பது சமூகக்கடமை…! – இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கின் தயாரிப்பில் அவரது சகோதரர் ஜி.ஆர். ஆதித்யா இயக்கும் படம் சவரக்கத்தி.

இயக்குநர் ராம், இயக்குநர் மிஷ்கின் கதைநாயகர்களாக நடிக்கும் சவரக்கத்தி திரைப்படத்தில் நடிகை பூர்ணாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இந்த வேடத்தில் நடிக்க மூன்று முன்னணி நடிகைகளை அணுகி, அவர்கள் நடிக்க மறுத்துவிட்டநிலையில் பூர்ணா நடிக்க முன் வந்திருக்கிறார்.

பிசாசு உட்பட பல படங்களில் கவனத்தை ஈர்த்த அரோல் குரோலிதான் சவரக்கத்தி படத்தின் இசையமைப்பாளர்.

சவரக்கத்தி படம் பற்றி இயக்குநர் மிஷ்கின் என்ன சொல்கிறார்?

“நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரைவிட பெரிதாகப்போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள்தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால்தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாகப்போடுவது பிடிக்காது.

நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும் , நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும். எனக்கு சவரக்கத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.

அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசையைக் கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர். இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ்ப்படத்தில் சொந்தக்குரலில் சுத்தமான தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன். 1௦% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளன.திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூகக்கடமை. திரையரங்கில் படம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.” என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

சவரக்கத்தி பற்றி இயக்குநர் ராம் என்ன சொல்கிறார்?

“இந்த உலகில் குடிக்க, அன்பைப் பற்றி பேச,  படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம்தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார். என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை சவரகத்திதான். சவரகத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது.” என்கிறார் இயக்குநர் ராம்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
சீச்சீய்…! மீண்டும் லீலையைத் தொடங்கிய சுச்சி…!

Close