நடிகர் சத்யராஜின் மகள் குறித்து பரவிய வதந்தி…

satyaraj-daughter-divya-copy

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கடந்த 7 ஆண்டுகளாக சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

திவ்யா ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

அதை அவர் மறுக்கவில்லை என்றாலும், அந்த செய்தியில் உண்மை இல்லாததினால் தானாகவே அடங்கிப்போனது.

இந்நிலையில் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சில சமூக வலைதளங்களில் சமீபத்தில் தகவல்கள் பரவியுள்ளது.

தன்னைக் குறித்த இந்த செய்தி திவ்யாவுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திவ்யா.

‘‘நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக வெளியாகும் தகவல்களில் சிறிதும் உண்மையில்லை.

நான் கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறேன்.

மேலும் ஊட்டச்சத்து பிரிவில் உயர் படிப்பிலும் (‘PHD’) கவனம் செலுத்தி வருகிறேன்.

சினிமா மீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது. திரைப்படங்களை பார்த்து ரசிப்பேனே தவிர படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை.

ஊட்டச்சத்து சம்பந்தமான ஒரு ஆவணப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் அல்ல!’’

என்று தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார் திவ்யா!