மீ………………ண்டும் தள்ளிப்போன சர்வர் சுந்தரம்… மீளமுடியாத சோகத்தில் சந்தானம்…

server-sundaram1

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். சந்தானம் நடித்த, பல படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப்படமாக அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த சக்கப்போடுபோடு ராஜா படமும் படு தோல்வியடைந்தது.

எனவே நாகேஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படத்தின் தலைப்பை மீண்டும் வைத்து உருவாக்கியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தை பெரிதும் நம்பி காத்திருக்கிறார் சந்தானம்.

இந்தப் படத்தின் வெற்றியில்தான் சந்தானத்தில் எதிர்காலமே உள்ளது! ஒருவேளை இந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்கும்நிலைக்குத் தள்ளப்படுவார்.

சந்தானம் படங்களின் தொடர் தோல்வி காரணமாக, ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் பிசினஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கிய இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே பலதடவை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசாகவில்லை.

கடைசியாக, ஜூலை மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதோடு தொடர்ந்து பத்திரிகை விளம்பரங்களும் வெளியாகி வந்தன.

ஏற்கனவே பெருங்கடனில் இருந்த இப்படத்தின் தயாரிப்பாளர் அதிலிருந்து மீண்டுவிட்டார் என்று நினைத்த நேரத்தில், தற்போது இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ படம் வெளியாகாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த தகவலை ட்வீட் செய்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் இயக்குனர் ஆனந்த் பல்கி, இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த முறையும் சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் சந்தானம் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறாராம்.

சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், சந்தானத்தின் மற்ற படங்களுக்கும் மறைமுகமான சிக்கல்தான்.