தந்தையை போலவே ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்

madura veeran_1

விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார்.

தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்திலும் நடித்தார்.

இரண்டு படங்களும் வசூல் ரீதியில் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் சண்முகபாண்டியன்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி​ 2018​ காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு.

நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.