உள்ளூரில் 200, உலகஅளவில் 600 தியேட்டர்களில் – சங்கு சக்கரம்

sanguchakkaram1

 

ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கும் சக்தி குழந்தைகள் கையில்தான் இருக்கிறது.

குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வழக்கம் குறைந்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியடைகின்றன.

அப்படி வெற்றியடைந்த படங்கள் நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடித்தமான படங்களாகவே இருக்கும். குழந்தைகள் பார்க்க தகுதியான படம் என்று தெரிந்தால்தான் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். அப்படி வந்தால்தான் சூப்பர்ஹிட் படம்.

இப்படியாக தமிழ்சினிமாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் குழந்தைகளுக்காக படங்கள் வருவது அபூர்வமாகிவிட்ட நிலையில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக வெளியாகிறது ‘சங்கு சக்கரம்’.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த ‘லியோ விஷன்’ நிறுவனமும் சதீஷின் ‘சினிமாவாலா’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘சங்குசக்கரம்’ படத்தை பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுவபம் பெற்ற மாரிசன் இயக்கியுள்ளார்.

புன்னகைப் பூ கீதாவும், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் முக்கிய கேரக்டர்கள் ஏற்றிருக்கும் இந்தப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நடித்திருக்கின்றன.

குழந்தைகளின் வருகையை மனதில் வைத்து கிறிஸ்துமஸ் விடுமுறையில் 29-12-2017 வெளியாகிறது – ‘சங்கு சக்கரம்’.

தமிழ்நாட்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகமெங்கும் 600 திரையரங்குகளிலும் வெளியாகும் இந்தப் படத்தில் புன்னகைப் பூ கீதா, திலீப் சுப்பராயன், ஆகியோருடன் மோனிகா, தீபா, ஜெனிஃபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக் ஆதித்யா, அஜீஷ், ஆதர்ஷ் என நிறைய குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்!

கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்த்ன் ஒளிப்பதிவை ரவிகண்ணன் கவனித்துள்ளார். ஷபீர் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை விஜய் வேலுக்குட்டி கவனித்துள்ளார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.

சங்குசக்கரம் படம் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்?

‘‘குழதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஹாரர் படம் இது! ஹார் படம் என்றதும் இது வழக்கமான பேய்ப் படம் என்று நினைக்க விட வேண்டாம். பேய் பிசாசு போன்ற விஷயங்களை சட்டையர் செய்து எடுக்கப்பட்டுள்ள படம். கடவுள், தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள் ஏன் பேய் இருக்கும் வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தால் ‘பேய்’யால் வரும் ஆபத்துக்களை தவிர்க்கலாம் அல்லாவா? இதுபோன்ற விஷயங்களை மையப்படுத்தி குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும் என்று எடுக்கப்பட்டுள்ள படம் இது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘மை டியர் குட்டிச்சாத்தான்‘ படம் மாதிரியான ஒரு படம்!”