சங்கிலி புங்கிலிக்கு கதவத் தொறக்காத தியேட்டர்காரர்கள்

sangili-bungili-kadhava-thorae-stills-012

அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’  நிறுவனம், ஃபாக்ஸ்  ஸ்டார் நிறுவனத்துடன்  இணைந்து தயாரிக்கும் படம் – சங்கிலி புங்கிலி கதவத்  தொற.

இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

விஷால் சந்திரா சேகர் இசை அமைக்கும் இப்படத்தை புதிய இயக்குனர் ஐக் இயக்கியுள்ளார்.

சங்கிலி புங்கிலி கதவத் தொற படம் நகைச்சுவை  கலந்த திகில் படம் என்பதால், கோடைகால விடுமுறைக்கு ஏற்ற படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்  மே 19ஆம் தேதி வெளியிட நாள் குறித்தனர்.

அந்த தேதியே சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்துக்கு நெகட்டிவ்வாகிவிட்டது.

சில வாரங்களுக்கு முன் வெளியான பாகுபலி-2 படத்துக்கு இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

அதனால் பாகுபலி- 2 திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த சூழலில்தான் சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்துக்கு தியேட்டர்களை கேட்டு அணுகியது ஃபாக்ஸ்  ஸ்டார் நிறுவனம்.

ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி-2 படத்தை தூக்கிவிட்டு, தொடர்ந்து தோல்விப்படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜீவாவின் படத்தை திரையிட தியேட்டர்காரர்கள் என்ன முட்டாள்களா?

ஃபாக்ஸ்  ஸ்டார் நிறுவனம் கதவைத்தட்டிய தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்துக்கு  தியேட்டர் தர மறுத்துவிட்டார்கள்.

அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிடலாமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கடைசியில் 75 தியேட்டர்கள் கிடைத்தால்கூட போதும், படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி சுமார் 75 தியேட்டர்களில் ரிலீஸாகிறது – சங்கிலி புங்கிலி கதவத் தொற.