சிவலிங்காவுக்காக காத்திருக்கும் சக்தி வாசு

sakthivasu-stills-with-p-vasu

பி.வாசுவின் மகன் என்ற விசிட்டிங் கார்டோடு நடிகராக அறிமுகமானவர் சக்தி வாசு.

தொட்டால் பூ மலரும், மஹேஷ் சரண்யா மற்றும் பலர், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் என ஏகப்பட்ட படங்களில் நடித்தும் முதல்வரிசையில் இன்னமும் அவரால் இடம் பிடிக்கமுடியவில்லை.

தனி கதாநாயகனாக நடித்த படங்கள் கை கொடுக்காதநிலையில் தற்போது அவரது அப்பா பி.வாசுவின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சிவலிங்கா படத்தில் நடித்துள்ளார்.

சிவராஜ் குமார் நடித்த சிவலிங்கா கன்னடப் படத்தில் ஏற்று நடித்த அதே வேடத்தில்தான் தற்போது தமிழிலும் நடித்திருக்கிறார் சக்தி வாசு.

“சிவலிங்கா என் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

கன்னடத்தில் 150 நாட்கள் ஓடியது. எனக்கும் அங்கே பெரிய பெயர்  கிடைச்சது.

கன்னடத்தில் சிவாராஜ்குமாருடன் சேர்ந்த நடிச்ச நான் தமிழில் லாரன்ஸ் மாஸ்டருடன் நடித்திருக்கிறேன்.

சிவலிங்கா கன்னடத்தில் பெரிய ஹிட்டானாலும் தமிழுக்காக நிறைய விஷயங்களை அப்பா மாத்தி இருக்கார்.

சந்திரமுகி படத்தில் எப்படி நிறைய விஷயங்களை அப்பா  மாத்தினாரோ அதே மாதிரி சிவலிங்காவுல லாரன்ஸ் சாருக்காகவும் எனக்காகவும் ரொம்ப நிறைய விஷயங்களை மாத்தியிருக்கிறார்.”

என்று சொல்லும் சக்தி வாசு, சிவலிங்கா படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகிறார்…

“லாரன்ஸ் மாஸ்டருக்கு  நான் நன்றி சொல்லியே ஆகணும்.

அவர் கிட்ட கதையை பற்றி என் அப்பா சொல்லும்போது, படம் நல்லா இருக்கு. ஆனா சக்தி கேரக்டரை நீங்க இன்னும் டெவலப் பண்ணனும். அப்பதான் ஸ்கிரிப்ட்  நிக்கும்னு நிறைய விஷயம் சொன்னார்.

அப்பா ரொம்ப ஹேப்பியானார். எனக்கும் ரொம்ப ஹேப்பியாச்சு.

லாரன்ஸ் மாஸ்டர் ஒரு நடிகனா மட்டும் யோசிச்சிருந்தா இதை அவர் சொல்லியிருக்க மாட்டார்.

அவருக்குள்ளே ஒரு டைரக்டர் இருக்கறதால, டெக்னீஷியன் இருக்கறதால, ஸ்கிப்ட்ரைட்டர் இருக்கறதால அவர் ஸ்கிரிப்ட்டை சேன்ஜ் பண்ணலாம்னு… என் போர்ஷனை  ஜாஸ்தி ஆக்கினா இந்த படம் இன்னும் நல்லா வரும்னு ஒரு விஷயத்தை அவரால சஜஸ்ட் பண்ண முடிந்தது.

இந்த படம் மக்களை கண்டிப்பா எக்ஸ்ஸைட் பண்ணும். கண்டிப்பா மக்களுக்கு பெரிய டிரீட்டா இருக்கும்.

சந்திரமுகிக்கு பிறகு அப்பா பண்ணுற படம்ங்கிறதால இதை எந்தமாதிரி படமா பண்ணனும்னு அவருக்கும் தெரியும்.

அதே மாதிரி காஞ்சனா, காஞ்சனா-2 அப்புறம் லாரன்ஸ் மாஸ்டருக்கும் எந்த மாதிரி படம் குடுக்கணும்ங்கிறதும் அவருக்கும் தெரியும்.

சிவலிங்கா படம்  அந்த இரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்.

மக்கள் ரசிப்பாங்க. மக்கள்கிட்ட போய் சேரும் படம் இது.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் பேசப்படும். எப்படி சந்திரமுகில க்ளைமேக்ஸ் பேசப்பட்டதோ அதே மாதிரி இந்த படத்தின் க்ளைமேக்ஸ்ஸை எதிர்பார்க்கலாம்.

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படம் சிவலிங்கா. அதனால இந்தப் படம் எனக்கு கம்பேக்குன்னு சொல்லலாம்.

இந்த படத்துல என்னோட பர்பாமன்ஸ் நிச்சயமாக பேசப்படும்.“