கடலோரக் கவிதைகள் கதாநாயகியை கவலைப்பட வைத்த செய்தி….

Actress Rekha @ Koditta Idangalai Nirappuga Audio Launch Stills

கடலோரக் கவிதைகள் படத்தில் பாரதிராஜாவினால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரேகா.

தொடர்ந்து, புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் உட்பட பல படங்களில் நடித்து 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் குணச்சசித்திர வேடங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துவரும் ரேகா தற்போது ஜெயப்பிரதா,

பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து “கேணி” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

“என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த செய்தியில் உண்மையில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய மகள் தற்போது உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ”

என்று தன் மகள் நடிக்க வருவதாக வெளியான செய்தியை மறுத்து விளக்கமளித்திருக்கிறார் நடிகை ரேகா.