அறவழிப்போராட்டத்தில் ரஜினிக்கு அவமரியாதை….

NADIGAR SANGAM CAUVERY PROTEST Stills 136

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக அமைப்பினர் சார்பில் அடையாள கண்டனப் போராட்டம் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்தப்போராட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், நாசர், விஷால், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.

அறவழியில் மவுனப் போராட்டம் என்று அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் சத்யராஜ் கையில் மைக்கைக் கொடுத்தனர்.

போலி தமிழன்கள் நிறைந்த நடிகர்களின் மத்தியில் சத்யராஜ் உண்மையான தமிழன்.

கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் தன்னுடைய தமிழ்ப்பற்றை நிரூபித்த சத்யராஜ், இந்த அறவழிப்போராட்டத்திலும் தன்னுடைய தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார். சாதாரணமாக அல்ல, ஆக்ரோஷமாக.

NADIGAR SANGAM CAUVERY PROTEST Stills 171

‘சபை நாகரிகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு பேச வேண்டாம் என நினைத்தேன். நான் என்றுமே தமிழர்களின் பக்கமும் தமிழ் உணர்வுகளின் பக்கமும்தான் இருப்பேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். எந்த அடக்குமுறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.”

என்று பேசிய சத்யராஜ் அடுத்து சொன்னதுதான் மேடையில் இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட கலைஞர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.

“குரல் கொடுக்க தைரியம் இருப்பவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லையெனில், ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்” என்று ஆவேசப்பட்டார் சத்யராஜ்.

அருகில் நின்ற ரஜினியைத்தான் சத்யராஜ் இப்படி குறிப்பிடுவதாக கருத்து தெரிவித்த நடிகர்கள், சத்யராஜின் செயலுக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

எனக்கும்

தமிழ்தான்

உயிர்மூச்சு…

ஆனால்

அதை பிறர்மீது

விடமாட்டேன்…

கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.