ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி

superstar-photos-at-fans-meet-stills-007

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது.

ரஜினியின் 161 – ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது.

முதலில், பாலிவுட் நடிகை வித்யாபாலனை அணுகியதாகவும் சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அனுராக் காஷ்யாப் இயக்கிய ‘காங்ஸ் ஆப் வாசிப்பூர்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ஹுமா குரேஷி.

அந்தப்படத்தைத் தொடர்ந்து மேலும் சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’வில் சோனாக்‌ஷி சின்ஹா, ‘கபாலி’யில் ராதிகா ஆப்தே என தொடர்ந்து பாலிவுட் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து வருகிறார் ரஜினி.

தனது அடுத்த படத்திலும் மற்றொரு பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷியை தனக்கு ஜோடியாக்கியுள்ளார் ரஜினி.