விஜய்சேதுபதியாக மாறிய ரஜினி….!

rajinikanth

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0, பா.இரஞ்சித் இயக்கத்தில் காலா படங்களில் நடித்து வரும் ரஜினி, அந்தப்படங்கள் வெளியாகும் முன்பே அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவுள்ளார்.

இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

தற்போது பிரபுதேவாவை வைத்து மெர்குரி எனும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் .

மெர்குரி படம் ஏப்ரல் 13-ல் வெளியாகிறது.

இந்தப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்நிலையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்துக்கொள்ளும் ரஜினி இப்போது விஜயசேதுபதி ரேன்ஜுக்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ஏன் இந்த மாற்றம்?

அரசியலுக்கு வரும் ரஜினிக்கு கட்சி நடத்த பெரும் தொகை தேவையாக இருக்கிறது.

அதனாலேயே வரிசையாக படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.