கெட்டபய சார் இந்த ரஜினிகாந்த்..!

rajinikanth-fans-meet-stills-010

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்வின் முதல்நாளில் ரஜினி பேசிய பேச்சு, தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது.

பலரும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி சமூகவலைத்தளங்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு என்கிற ரீதியிலும் கருத்துக்கள் உலா வருகின்றனர்.

அப்படி ஒருவருடைய கருத்துதான் இது.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்… வராமலும் இருக்கலாம்… யாரும் யாரையும் நிர்பந்த படுத்த முடியாது..! அவனவன் விருப்பம்..!

இந்த ரஜினி இப்படிதான் யா 1996 ல சொன்னான் 22 வருஷமா இப்படித்தான்யா வருவேன் வருவேன்னு சொல்றான் வரமாட்ரான் பயந்த பய ?

தமிழ் நாட்டுக்கு என்ன செஞ்சான் ?

ரசிகர்களுக்கு என்ன செஞ்சான் ?

அவனுக்கு என்ன தெரியும் ?

அவன் கர்நாடககாரன் ?

உண்மையான தமிழன்னா அவனை விரட்டனும்?

இப்படி உரிமைக்குரல் எழுப்பி வரும் என்னருமை தமிழ் பிள்ளைகளே வணக்கம்..!

ரஜினி பொம்பள பொருக்கி அவரை எம்.ஜி.ஆர் அடித்தார் என்று பொங்கும் போராளிகளே…

எம்.ஜி.ஆர் யார் ? ஜானகி யார் ? ஜெயலலிதா யார் ? லதா யார் ? வென்னிற ஆடை நிர்மலா யார் ? ராதா சலுஜா யார் ?

யாருக்காக மேல்சபை கலைக்கப்பட்டது ?

ரஜினி கர்நாடககாரன் அவன் அரசியலுக்கு வரக்கூடாது என்று கொதிக்கும் கொள்கை குன்றுகளே…

ரஜினி கர்னாடகக்காரன் அவன் காவிரியில் தண்ணீர் வாங்கி தரலைன்னு தொண்ட கிழிய கத்துறீங்களே இந்த பிரச்சனை காமராஜர் காலம் தொட்டு இருக்கும் பிரச்சனை எம்.ஜி.ஆர் கர்னாடகத்துகாரி சரோஜா தேவியை கட்டிப்புடிச்சி 40 படங்கள் நடிச்சாரே அப்பல்லாம் உங்க அப்பனும் தாத்தனும் கேட்டிருக்கலாமே ?

அது என்ன ரஜினி வீட்டு சொத்தா அள்ளிக்கொடுக்க ?

சரி சிவாஜி கணேசன் தமிழன்தானே எத்தன பேர்டா ஓட்டு போட்டீங்க ?

நடிகன் நாடாளக்கூடாது ? அப்புறம் ஜாதிக்கட்சி நடத்துறவனும், ஜாதிக்கட்சியை கூட்டு வச்சி பொழப்பு நடத்துறவனும் நாட்டை ஆளனும், நாங்க கைகட்டி அய்யா நீங்களும் உங்க புள்ளையும் பேரனும் பேத்தியும், அண்ணனும், தம்பியும் கொள்ளையடிங்கண்ணு காத்துக்கிட்டு இருக்கனுமாடா ?

ரஜினி ரசிகர்களுக்கு என்ன செஞ்சான் ?

என்னடா செய்யனும்…

என் படத்தை பார்க்க வந்தா உனக்கு வீடு கட்டிதர்ரேன்னு சொன்னாரா ?

இல்ல இலவசமா டி,வி பேன், பிரிட்ஜ், அண்டா குண்டா அடுப்பு பானை சட்டி தர்ரேன்னு சொன்னாரா ?

இல்லையே எல்லாம் தானா விரும்பி போய் பார்த்த கூட்டம் தானே..!

அப்புறம் என்ன செய்யனும் ?

படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்குங்க, உங்க குடும்பத்தை பாருங்க அம்மா அப்பாவை நல்லகவனிச்சுக்கங்க என்று ரஜினி சொன்னது உங்களுக்கு தப்பாத்தான்டா  தெரியும் என்னா ? உணர்ச்சியை தூண்டி , வெறியை ஏற்றி எத்தன பேர தீக்குளிக்க வைத்து, தொண்டனோட குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்தி நீங்க ஆட்சிய புடிச்சிறுக்கீங்க ? ஏண்டா உங்க குடும்பத்துல ஒருபயலும் தீக்குளிக்க மாட்டுறான் ? பயமா ? பதவிகிடைக்காம போயிரும் என்ற பகுத்தறிவா ?

ரஜினி நாட்டுக்கு என்ன செஞ்சார் ?

என்னடா செய்யணும்?

நீங்க இதுவரைக்கும் என்னடா புடுங்கி இருக்கீங்க ?

எல்லாத்துலயும் கமிஷன்,

ஆளுங்கட்சிகாரனுக்கு 40 சதவீதம்ன்னா எதிர்கட்சிக்காரன் 20 சதவீதம் வாங்குறான்.

அரசியல் கட்சின்னு லெட்டர் பேடோட அலையறவன் 5 சதவீதமாவது தாங்கன்னு பிச்சை கேட்கறான்..!

என் ரசிகர்களை அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து தவறாக பயன்படுத்தினர் என்று பகிரங்கமாக சொன்னோரே?

உன்னால் உன் தலைவனால் கட்சிகாரன் செய்யும் தில்லு முல்லை வெளிப்படையாக சொல்ல தெம்பு, திராணி,  தில் இருக்கா ?

நான் அரசியலுக்கு வந்தால் சம்பாதிக்கும் ஆசை உள்ளவர்களை விரட்டி விடுவேன் என்று ரஜினி சொன்ன மாதிரி எவனாவது ஒருத்தன் செயல்ப்படுத்தி இருக்கீறிகளா ?

அப்புறம் இத்தனை வருஷமா எத்தனை கோடி சம்பாத்யம் செய்து தின்னு கொழுத்தவனுக்கு ரஜினி எதிரியாகத்தான் தெரிவார்..!

உங்களை எல்லாம் முதலைகள் என்று தெரிஞ்சி வைச்சிருக்காரே இத விட என்னடா தெரியணும்.?

50 வருஷமா தமிழன் மட்டும் தானே தமிழ் நாட்டை ஆண்டான்.. ஏன்டா வெட்கமா இல்லை ?

எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலலிதாவுக்கும் ஆதரவாக ஓட்டுகேட்ட தமிழ் பிள்ளைகள் யார் என்பதை நாடறியும்?

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, அப்புறம் உங்க வீட்டுல சாக்கடை அடைச்சிருக்கிற பிரச்சனை, பக்கத்து விட்டு பிரச்சனை, குழாயடி சண்டை இப்படி எதிலும் ஈடுபடாமல் ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் ? என்று சிலர் கூக்குரல்

உங்கள் தலைவரும் நீங்களும் எத்தனை வருடமாக ஆட்சியில், கட்சியில் அரசியலில் இருக்கிறீர்கள்?

நீங்கள் ஏன் இந்த பிரச்சனைகளை சரி செய்யவில்லை ?

தங்கள் கவனத்துக்கு வரவில்லையா? அல்லது மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நமக்கென்ன கமிஷன் வந்தால் சரி என்று பொத்திக்கொண்டு இருந்து விடுகிறீர்களா ?

இத்தனை கட்சிகள் இருக்கின்றனவே மக்கள் போராடாமல் ஒரு பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கிறோம் என்று ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம் !

ஏன் போக்குவரத்து ஊழியர்களின் பணத்தை எடுத்து இலவசம் வழங்கி அவர்களை தெருவில் விட்ட புத்திசாலிகள்தானடா நீங்கள் ?

ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஸ்காலர்ஷிப் நிதியை எடுத்து இலவசங்களை அள்ளித்தெளித்த அயோக்கியர்கள்தானடா நீங்கள் ?

நீங்கள் எல்லாம் அரசியலில் இருக்கும் போது ரஜினி மட்டுமல்ல சாலையில் சுற்றி திறியும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்..!

உங்களை பொறுத்தவரை கெட்டபய சார்… இந்த ரஜினி காந்த்.!