ரஜினி படத்துக்கு அனிருத் இசை…! – தனுஷ் நிலை என்ன?

ani1

காலா’, ‘2.0’ ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இப்போது இந்த படம் குறித்த இன்னொரு அதிகாரபூர்வ தகவலை  ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ரஜினியுடன் முதன் முதலாக இணைகிறார் அனிருத்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களயும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்.

ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கும் தகவல் வெளியானதும், தனுஷின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை திரையுலகினர் உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கிவிட்டனர்.

காரணம், ரஜினியின் மருமகனான தனுஷுக்கும் அனிருத்துக்கும் ஏற்கனவே தகராறு.

அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய தனுஷ்தான் அவரை முன்னணி இசையமைப்பாளராக உருவாக்கினார்.

அதை மறந்துவிட்டு, தனுஷ் உடைய எதிரிகளான சிவகார்த்திகேயன், விக்னேஷ்சிவன், சிம்பு ஆகியோருடன் கூட்டணி போட்டார் அனிருத்.

எனவே அனிருத் மீது கொலவெறியில் இருக்கிறார் தனுஷ்.

இந்த சூழலில்தான் தனுஷின் பரமஎதிரியான அனிருத்துக்கு தன்னுடைய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் ரஜினி.

அவருடைய இந்த முடிவு தொடர்பாக ரஜினி குடும்பத்தில் புகைச்சல் ஏற்படுவது நிச்சயம்.

ani