ர – விமர்சனம்

ra

‘ர’ என்றால் ‘அபகரித்தல்’ என்று அருஞ்சொற்பொருள் சொன்னதைப்போலவே கதையையும் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரபு யுவராஜ்.

ஃபேன்டஸி த்ரில்லர் என்ற கண்டிஷன்அப்ளையுடன் கதை சொன்னதால் லாஜிக் பற்றி எல்லாம் யோசிக்க அவசியமில்லாமல் போய்விடுகிறது.

ஒரு அமானுஷ்ய சக்தி, கதையின் நாயகனை அபகரிக்க முயல்வதும்  அதில் மாட்டிக்கொண்ட கதாநாயகனின் போராட்டமும்தான்  ர படத்தின் கதை.

அமானுஷ்ய சக்தியின் திருவிளையாடல்களாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை, பின்பாதியில் அக்கா புருஷன் செய்த கொலைகளாக சொல்லப்படும் ட்விஸ்ட் சராசரி.

இயக்குநர் இன்னும் புத்திசாலித்தனமாக யோசித்திருந்தால் ர படத்தின் வீச்சும் அதிகமாகி இருக்கும்.