படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனை…!

theatre

 

தியேட்டர்களில் டிஜிட்டலில் திரைப்படங்களை திரையிடும் தொழில் நுட்பத்தை வழங்கும் ‘QUBE’ UFO, SCRABBLE, PXD, SONY, PRO-V, AREOS போன்ற நிறுவனங்கள், அதற்காக மிக அதிகமான தொகையை வசூலிப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச்-1 புதிய திரைப்படங்கள் வெளியிட மாட்டோம் என அறிவித்தனர்.

ஏற்கெனவே அறிவித்திருந்த பட வெளியீட்டு நிறுத்தும் இன்று முதல் துவங்கியது.

இந்த பட வெளியீட்டு நிறுத்தத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடக்கூடும் என்பதால் இது குறித்து ‘தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்றும், இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF என்கிற Virtual Print Fee கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.

திரையரங்க உரிமையாளர்கள் சிலர் சொந்தமாக Projector வாங்கி வைக்காமல் Digital Cinema Service Provider என்று அழைக்க கூடிய QUBE, UFO, SCRABBLE, PXD, SONY, PRO-V, AREOS போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுத்து அவர்களது திரையரங்கில் நிறுவியுள்ளார்கள்.

அந்த வாடகையை அவர்கள் கட்டாமல் தயாரிப்பாளரை கட்ட வைக்கிறார்கள்.

அந்த கட்டணம் தான் VPF – Virtual Print Fee or Digital Print Fee.

திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக திரையரங்குகளில் வைத்துகொள்ள வேண்டும்.

அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிககைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம்.

இந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.