300 தியேட்டர்களில் புலிமுருகன்… உண்மையா?

pulimurugan-stills-035

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த படம் ‘புலிமுருகன்’.

வைசாக் இயக்கத்தில் மோகன்லாலுடன் கமலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமீதா, கிஷோர், லால் உட்பட பலர் நடித்துள்ள ‘புலிமுருகன்’ படத்துக்குகோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சிறப்பாக சண்டை காட்சிகள் அமைத்ததற்காகத்தான் பீட்டர் ஹெய்னுக்கு தேசிய விருது கிடைத்தது.

புலிமுருகன் படம் தமிழில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு  வருகிற 16-ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில்  2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில்  வெளியாகவிருக்கும் ‘புலிமுருகன்’ 300 தியேட்டர்களில் வெளியாகவிருப்பதாக  பட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

மலையாள டப்பிங் படத்துக்கு 50 தியேட்டர்கள் கிடைப்பதே அபூர்வம் என்ற சூழலில் புலிமுருகன் படத்துக்கு 300 தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது என்றால்.. ஆச்சர்யம்தான்.