ஸ்பைடர் படத்தை அடுத்து பரத் நடிப்பில் வரும் பொட்டு

pottu-174

மைனா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் – பொட்டு.

பரத் கதாநாயகனாக நடித்துள்ள பொட்டு படம் நீண்டகாலத்தயாரிப்பாக வளர்ந்து வருகிறது.

ஸ்பைடர் படத்தில் பரத் முக்கிய வேடத்தில் நடிப்பதை வைத்து பொட்டு படத்தை திரைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.

மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – செந்தில்

ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்

இசை – அம்ரீஷ்

பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங் – எலீசா

கலை – நித்யானந்த்

நடனம் – ராபர்ட்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.

பொட்டு படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் என்ன சொல்கிறார்?

“இது மருத்துவக் கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை. முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள்.

மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா நடிக்கிறார்.

இனியா மலைவாசிப் பெண்ணாக நடித்துள்ளார்.

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது.

பொட்டு படம் விரைவில் வெளியாக உள்ளது.”