மல்ட்டிப்ளக்ஸில் தொடரும் பார்க்கிங் கட்டணக்கொள்ளை…

426982424_4fe8fa1f71

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர் தியேட்டர் கட்டணங்களை மாற்றியமைக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று சில வாரங்களுக்கு முன் சினிமா டிக்கெட் விலையில் மாற்றம் செய்து அறிவிப்பு ஆணை வெளியிட்டது தமிழகஅரசு.

இந்நிலையில், தியேட்டர் பார்க்கிங் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

அவர்களின் இந்த கோரிக்கையையும் ஏற்று பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயித்து புதிய ஆணையை நேற்று பிறப்பித்தது தமிழக அரசு.

அதன்படி இனி மாநகராட்சிக்குட்பட்ட தியேட்டர்களில் நான்கு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு 20 ரூபாயும், டூ வீலர்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட தியேட்டர்களில் நான்கு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு 15 ரூபாயும், டூ வீலர்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டவுன் பஞ்சாயத்து, கிராமப்பஞ்சாயத்துகளுக்குட்பட்ட தியேட்டர்களில் நான்கு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு 10 ரூபாயும், டூ வீலர்களுக்கு 5 ரூபாயும் நிர்ணயித்துள்ள தமிழக அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் சைக்கிள்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் மல்ட்டிப்ளக்ஸ்களின் கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் விவாதமாகவே மாறியது.

நிச்சயமாக மல்ட்டிப்ளக்ஸில் பார்க்கிங் கட்டணத்தைக் குறைக்க மாட்டார்கள். பல மல்ட்டிப்ளக்ஸ்களுக்கு தியேட்டர் கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.

இதுதான் தற்போது உண்மையாகி இருக்கிறது.

சென்னையில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ்களில், வழக்கம்போல் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய், 30 ரூபாய், 50 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணக் கொள்ளை தொடர்கிறது.