தோனி ரசிகராக விக்ரம் பிரபு… ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி….

pakka


அதிபர் என்ற படத்தை தயாரித்த டி. சிவகுமார் அடுத்து தயாரிக்கும் பக்கா படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நெருப்புடா படத்தில் விக்ரம்பிரபு உடன் இணைந்த நிக்கிகல்ராணி இந்தப்படத்திலும் கதாநாயகி. (வேற ஒண்ணும் இல்லையே?)

இன்னொரு கதாநாயகியாக பிக்பாஸ் பிந்துமாதவி நடிக்கிறார்.

சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் நடிக்கிறார். (பணம் போட்டதுக்கு இது கூட இல்லைன்னா எப்படி?)

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன்

இசை – சி.சத்யா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர்

நடனம் – கல்யாண், தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்

எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – பி.சரவணன்

தயாரிப்பு – டி.சிவகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ். சூர்யா

அது என்னங்க பக்கா?

படத்தின் நாயகன் விக்ரம்பிரபுவிடம் கேட்டால்….

“திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.

ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி)

கிராமத்து பெரிய மனிதருடைய மகள் நதியா(பிந்து மாதவி)

இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கலகலப்பான பக்கா படம்.

நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்..

இதுவரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரிணாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும்.

கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்” என்றார் விக்ரம்பிரபு.

பக்கா படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற ஊர்களில் நடை பெற்றிருக்கிறது.

Tags: