படைவீரன் படத்தில் பிரேம்ஜிக்குப் பிடித்த பாட்டு…

padaiveeran-dhanush-karthikraja

மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது.

பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், மிகமுக்கியமான கதாபத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக அம்ரிதா என்ற ஐயர் பொண்ணு அறிமுகமாகிறார்.

இயக்குநர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

படைவீரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் படைவீரன் படத்தை பார்த்த தனுஷ் அதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக சொன்னாராம். (நம்புற மாதிரி இல்லையே)
தனுஷ் இப்படி சொன்னதும், இயக்குநர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கினாராம்.

கார்த்திக்ராஜாவின் உடனடியாக டியூன்போட பிரியனின் வரிகளில் “ லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலைப் பாடி கொடுத்தாராம் நடிகர் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.