செம்மொழிப் பூங்காவில் செம ஆட்டம்போட்ட அமேரா தஸ்தூர்

oodi-oodi-uzhaikanum2a

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ஒரு பக்க கதை, பிரபு தேவா நடிக்கும்  எங்க மங் சங்ஆகிய படங்களைத் தயாரித்து வரும்  வாசன்  விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்  சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும்  என்ற  படத்தையும்  தயாரித்து வருகிறது.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அமேரா தஸ்தூர்  நடிக்கிறார்.

மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான  நடிகர் நடிகைகள்  நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –     கோபிநாத்

இசை    –    ஜிப்ரான்

கதை  – ஞானகிரி

கலை –  வனராஜா

ஸ்டன்ட்      –     சில்வா

எடிட்டிங்     –    ராமாராவ்

நடனம்  – அசோக்ராஜா

தயாரிப்பு  –        கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்

திரைக்கதை, வசனம், இயக்கம்  –   கே.எஸ்.மணிகண்டன்.   இவர்கள் ஏற்கனவே சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கியவர்.

ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தன.

சமீபத்தில் அமேரா தஸ்தூர்  ஆடிப் பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

அவர் ஜாலியாக ஆடிப்பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கிளார் இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன்.