சாதி பலத்தைக்காட்டி மிரட்டுகிறாரா நிவேதா பெத்துராஜ்?

நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் நடித்தார்.

அதையடுத்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்திலும். ஜெயம் ரவியுடன் டிக் டிகக் டிக் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நிவேதா பெத்துராஜ் நடித்தது என்னவோ சில படங்கள்தான்.

தெருவில் நடந்துபோனால் அவரை மக்களுக்கு அடையாளம் தெரியாது.

ஆனால் தொடர்ந்து சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகர் நடிகைகளில் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுச்சிலீக்ஸில் நிவேதா பெத்துராஜ் பெயரும் அடிபட்டது.

அதன் பிறகு பிஜி தீவில் பார்ட்டி படப்பிடிப்பு நடந்தபோது, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளினார் என்ற தகவல் படத்துறையில் பரவிக்கிடக்கிறது.

அது மட்டுமல்ல, வெங்கட்பிரபு அண்ட்கோ பார்ட்டி பண்ணும்போதெல்லாம் நிவேதா பெத்துராஜ் லிட்டர்கணக்கில் சரக்கடித்த கதையும் கோடம்பாக்கத்தில் நாறிக்கிடக்கிறது.

இந்நிலையில், நீச்சல்உடை அணிந்த நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சியான ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் டிரெண்டானது.

குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சிப்படம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“அது நான் இல்லை” என்று இப்போது மறுப்பு தெரிவித்திருக்கிறார் நிவேதா.

“கடந்த சில நாட்களாக வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு அது நான்தான் என்று பொய்யாக கூறி வருகின்றனர்.

என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றி என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இந்த செயலை வெறும் கவனக்குறைவான செயலாகப் பார்க்க முடியவில்லை.

என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ திட்டமிட்டே இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டி உள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் என்னை காயப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு.

எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு.  

இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு பெரிய பாதிப்பை தருகிறது.

இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன்”

என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

‘‘நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு பெரிய பாதிப்பை தருகிறது.” என்ற அவரது ஆதங்கம் நியாயமானதுதான்.

ஆனால், “எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு.” என்று தன்னுடைய சாதிபலத்தை வெளிப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமல்ல, மார்ப் செய்யப்பட்ட கவர்ச்சிப் படத்துக்காக இப்போது இப்படி கவலைப்படும் நிவேதா பெத்துராஜ், சுச்சி லீக்ஸ் சர்ச்சையின்போது ஏன் வாயைத்திறக்கவில்லை.?

ஜெ.பிஸ்மி