நிபுணன் – விமர்சனம்

nibunan-stills-004

கதை

சமூக ஆர்வலர், டாக்டர், வக்கீல் என ஒரேவிதமாக, அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் நடக்க, அதை புலனாய்வு செய்கிறது பிரசன்னா, வரலட்சுமி அடங்கிய அர்ஜுனின் புலனாய்வு குழு.

தொடர் கொலைகளுக்கான காரணத்தை துப்பறியும்போது, முகம் தெரியாத அந்த சீரியல் கில்லரின் அடுத்த இலக்கே அர்ஜுன்தான் என்பது தெரிய வருகிறது!

யார் அந்த கொலையாளி?

தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன?

அவனது அடுத்த குறியாக அர்ஜுன் ஏன்?

அர்ஜுனுக்கும் அவனுக்கும் என்ன விரோதம்?

போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடைதான் ‘நிபுணன்’!

கமெண்ட்..

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மலையாளத்தில் ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள படம்.

அர்ஜுனின் 150 ஆவது படம் இது என்ற பொறுப்பை உணர்ந்து, நிபுணன் படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தியாவையே உலுக்கிய ஒரு கொலை வழக்கை அடிப்படையாக வைத்து, தொடர் கொலைகள், புலனாய்வு, திடீர் திருப்பங்கள் என்று விறுவிறுப்பான காட்சிகளுடன் திரைக்கதை  அமைத்து நிபுணன் படத்தை பரபரப்பான க்ரைம் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, எஸ்.நவீனின் இசை, மற்றும் சண்டை காட்சிகள் ‘நிபுணன்’ படத்துக்கு கூடுதல் தரத்தைக் கொடுத்திருக்கிறது.