சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர்… ‘NGK’

ngk


செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் முடிவடைந்தநிலையில் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.

ஒரு கட்டத்தில் அந்தப்படம் வெளியாகும் என்ற நம்பிக்கையை இழந்த செல்வராகவன் நடிகர்  சூர்யாவிடம் ஒரு கதை சொன்னார்.

அவர் சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடித்துப்போக, சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா 36 படம் தொடங்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மார்ச்-5, இயக்குநர் செல்வராகவன் பிறந்த நாள் என்பதால் ‘சூர்யா-36’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ மார்ச் 5-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவித்தனர்.

அதன்படி இப்படத்தின் ஃபரஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

யாரும் யூகிக்காதவகையில் இந்தப் படத்திற்கு வித்தியாசமாக ‘NGK’ என்று ஆங்கிலப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘NGK’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் தகவல் இடம்பெறவில்லை.

சூர்யா நடித்த படங்களுக்கு ‘அயன்’ ‘ஆறு’, ‘24’ என்றெல்லாம் இதற்கு முன் வித்தியாசமான டைட்டில்கள் சூட்டப்பட்டுள்ளன.

அதேபாணியில் ‘NGK’ என்று இப்போது வித்தியாசமான டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள்.

‘NGK’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.