மெர்சல் படத்தைப்போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும்….

nenjil


அரைத்தமாவையே அரைக்காமல் படத்துக்குப்படம் வித்தியாசமான கதைகளைக் கையில் எடுப்பவர் இயக்குநர் சுசீந்திரன்.

அதனாலேயே இவரது ஒவ்வொரு படமும் பார்வையாளனுக்கு ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கிறது.

தற்போது அவர் இயக்கிவரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் இதுவரை நான் இயக்கிய படங்களிலிருந்து வேறுபட்டது, மாறுபட்டது என்கிறார் சுசீந்திரன்.

இந்தப் படத்தில் சந்தீப், விக்ராந்த் கதைநாயகர்களாக நடிக்க, மெஹரின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.

“இந்த படம் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு சமூகப்பிரச்சனையையும் படத்தில் வைத்திருக்கிறேன்.

‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்று சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள படம் இது.

இமானுடன் தொடர்ந்து ஐந்தாவதுமுறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளன்.
படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.

என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார்.
சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.

வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் ஒளிப்பதிவாளர் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம்.

இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார்.

நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும்.

இந்த படம் என்னுடைய பாணியில் இருக்கும்.

என்னுடைய எல்லாப்படங்களிலும் சமூகநீதி இருக்கும்.

நான் இயக்கிய படங்களில் ராஜபாட்டை ஒரு தோல்வி படம். ஆனாலும் அதிலும் ஒரு சமூக அக்கறை இருக்கும்.

மெர்சல் படத்தில் இருக்கும் சோஷியல் மெஸேஜைப்போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான மெஸேஜ் உள்ளது.

இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார்.

முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆர்வமாகவே இருக்கிறேன்.

புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது.

என்னுடைய லைப்ரரியில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இது போன்ற படங்கள்தான் காலத்திற்கும் நிற்கும். காலம் கடந்த பிறகும் ஒரு இயக்குநராக என் பெயரை உச்சரிக்க வைக்கும்.

மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அந்தப்படம் வெற்றியடையும்போது அந்த வெற்றி கதாநாயக நடிகரை மட்டுமே சேரும்.

புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும்போதுதான் அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரைச் சேரும்.

இது விறுவிறுப்பான படமாக இருக்கும்.

‘நான் மகான் அல்ல’, பாண்டியநாடு’ போன்ற படங்களைப்போல் கிளைமாக்ஸ் மிரட்டலாக இருக்கும்.

இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் ரசிகர்களை நிச்சயமாக ஈர்க்கும்.”

என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.