இருபது நிமிடக்காட்சி நீக்கம்…! – கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

nenjil-thunivirundhal-audio-stills-019

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் கடந்த வாரம் அதாவது, நவம்பர் 10 ஆம் தேதி வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

“நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம்.

கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் புதிய வெர்சன் இன்று பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.

கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நாங்கள் 15 நாட்கள் படமாக்கினோம்.

ஆனால் இப்போது சூழ்நிலை காரணமாக மெஹ்ரீன் நடித்த காட்சிகளை நீக்கினோம்.

இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”

என்று தெரிவித்தார் இயக்குநர் சுசீந்திரன்.