கீர்த்தி சுரேஷை மிரட்டிய நயன்தாரா…!

vignesh-sivan

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குனர் விக்னேஷ் சிவனைப் பற்றி குறிப்பிடும்போது, ‘விக்னேஷ் சிவன் பிரதர், விக்னேஷ் சிவன் பிரதர்’ என்று அழுத்தமாக குறிப்பிட்டார் கீர்த்தி சுரேஷ்.

அவர் பேசி முடித்ததும் மைக்கைப் பிடித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பே பொறுக்கமுடியாமல் பொங்கிவிட்டார்.

“கீர்த்தி சுரேஷ் பேசும்போது என்னை ‘பிரதர்… பிரதர்’ என்று அழுத்தம் கொடுத்து பேசினார்!
அவர் எதற்கு அப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை.

‘கீர்த்தி, நீங்கள் பயப்படவேண்டாம்! நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள்!’’ – என்று கீர்த்தி சுரேஷுக்கு விக்னேஷ் சிவன் தைரியம் கொடுத்தார்.

இதன் பின்னணி என்ன?

விக்னேஷ் சிவனை கீர்த்தி சுரேஷ் சகோதரனாக அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

தன்னுடைய ஆட்டோகிராபில் பல பக்கங்களை கிழித்துப்போட்டுவிட்டு தற்போது விக்னேஷ்சிவனின் காதலியாக இருக்கிறார் நயன்தாரா.

இந்த காதலாவது கல்யாணத்தில் முடிய வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் நயன்தாராவுக்கு, மிக சமீபத்தில்தான் விக்னேஷ்சிவனின் கடந்தகாலக்கதைகள் எல்லாம் காதுக்கு வந்திருக்கின்றன.

சிம்புவின் நண்பராக இருந்த விக்னேஷ்சிவன் ஆரம்பத்தில் அப்படி இப்படி இருந்தவர் என்பதும், கவர்ச்சி நடிகை சோனாவின் நெருங்கிய நண்பர் என்பதும், சோனாவின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்தவர் என்ற தகவலும் மிக தாமதமாகவே நயன்தாராவின் காதுக்கு வந்திருக்கின்றன.

அதுமட்டுமல்ல, தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாகப் பழகுகிறார் என்ற தகவலும் நயன்தாராவின் கவனத்துக்குச் செல்ல, இது தொடர்பாக தானே கீர்த்தி சுரேஷுக்கு போன் செய்து மிரட்டும் தொனியில் எச்சரித்திருக்கிறார் நயன்தாரா.

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோதுதான் அவரது காதல்வலையில் விழுந்தார் நயன்தாரா.

தன்னைப்போலவே கீர்த்தி சுரேஷுக்கும் விக்னேஷ்சிவன் காதல்வலை விரித்துவிட்டால்?

எனவேதான் முன் எச்சரிகை நடவடிக்கையில் இறங்கி கீர்த்தி சுரேஷுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதன் காரணமாகவே தானா சேர்ந்த கூட்டம் படவிழாவில் விக்னேஷ் சிவனை பிரதர் பிரதர் என்று அழுத்திச் சொல்லி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகாவது நயன்தாராவின் மிரட்டல் இல்லாமல் இருக்குமா?