லைகாவில் ஏற்பட்ட மாற்றம்…. – காரணம் நயன்தாராவா?

Nayanthara2

டிசம்பர் 16 ஆம் தேதி அன்று ‘லைகா’ சுபாஸ்கரனுடன் நயன்தாரா திடீர் நெருக்கம்… என்ற தலைப்பில் தமிழ்ஸ்கிரீன்.காம் வெளியிட்ட செய்திதான் இது.

ஏறக்குறைய மூன்று வாரங்களுக்குப் பிறகு நாம் வெளியிட்ட செய்தியை சம்மந்தப்பட்டவர்களே ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.

லைகாவின் கிரியேட்ஹெட் பதவியில் இருந்த ராஜு மகாலிங்கம் லைகாவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதை தற்போது உறுதிபடுத்தியிருக்கிறார்.

 

 

லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்தவர் ராஜு மகாலிங்கம். இவரது தலைமையில்தான் 2.0 படம் உட்பட லைகாவின் படத்தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராஜு மகாலிங்கம் லைகாவிலிருந்து வெளியே(றி)ற இருப்பதாக தகவல்.

லைகாவில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த அவரை அசைத்தது வேறு யாருமல்ல…. நயன்தாராதான்.

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெல்சன் என்பவரது இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு சுபாஸ்கரனுடன் ‘மரியாதை நிமித்தமாக’ பேச ஆரம்பித்த நயன்தாரா, ஒருகட்டத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்திருக்கிறார்.

சுபாஸ்கரனுடன் நயன்தாரா நேரடி தொடர்பில் இருப்பதை அறிந்த ராஜு மகாலிங்கம், கோலமாவு கோகிலா படத்திலிருந்து நயன்தாராவை கழற்றிவிடும் முயற்சியில் இறங்கயிருக்கிறார்.

இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த நயன்தாரா முந்திக்கொண்டுவிட்டார். ராஜு மகாலிங்கம் பற்றி சுபாஸ்கரனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை….

லைகாவிலிருந்து ராஜு மகாலிங்கம் வெளியேறும் சூழல் உருவாக்கப்பட்டு, ராஜினாமா செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார்.

அவருடைய இடத்துக்கு, பிரபல விநியோகஸ்தரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனை சிபாரிசு செய்துள்ளார் நயன்தாரா.

அண்மையில் வெளியான அறம் படத்தின் விநியோகஸ்தர் இவர்தான். தன்னுடைய மானேஜர் பெயரில் தயாரித்த அறம் படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுத்த நன்றிக்கடனுக்காக, ராஜு மகாலிங்கத்தின் நாற்காலியை ரவீந்திரனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

இதுகுறித்து டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தரப்பில் கேட்டால், லைகாவில் இணைந்தது உண்மைதான். ஆனால் ராஜு மகாலிங்கம் பணியாற்றிய கிரியேட்டிவ் ஹெட்டாக அல்ல, டிஸ்ட்ரிபியூஷன் டிவிஷனின் அட்வைசராகவே பணியாற்றுகிறார் என்று சொல்கின்றனர்.

அப்படி என்றால், ராஜு மகாலிங்கத்தின் நாற்காலி யாருக்கு? ஒருவேளை தன்னுடைய தற்போதைய காதலர் விக்னேஷ் சிவனை அதில் அமர்த்தி அழகு பார்க்க திட்டமிட்டிருக்கிறாரோ என்னவோ?