உனக்கு ஜோடியாக நயன்தாரா வேண்டாம்! – கட்டையைப் போட்ட டி.ஆர்…. கடுப்பான எஸ்.டி.ஆர்….

tr

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி, செய்’தீ’யாக எரிந்து அடங்கிவிட்டது.

இந்நிலையில் அடுத்த செய்’தீ’யை பற்ற வைத்துவிட்டார் சிம்புவின் அப்பாவான டி.ஆர். என்கிற டி.ராஜேந்தர்.

இயக்குநர் பாண்டிராஜும் இந்தப் படத்தில் பார்ட்னர் என்றாலும், டி.ஆரைப் பொருத்தவரை அவரே ஆல் இன் ஆல் அழகுராஜா.

அவரை கேட்காமல் பாண்டிராஜ் பாத்ரூம் கூட போகக்கூடாது என்று முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.

எனவே நயன்தாராவிடம் கதை சொல்லி அவரை நடிக்க சம்மதிக்க வைத்ததோடு பாண்டிராஜின் பணி ஓவர்.

நயன்தாராவின் சம்பள விவகாரம் இத்யாதிகள் எல்லாம் டி.ஆரின் இலாகாவில்தான் வரும்.

வந்தது.

‘நயன்தாரா 2 கோடி சம்பளம் கேட்கிறார்’

– என்று பாண்டிராஜ் சொன்னதும்,

‘நம் பழைய மருமகள்தானே நாம பேசினால் ஓசியாவே நடிச்சுக் கொடுப்பார்’

– என்ற நப்பாசையில் நயன்தாராவுக்கு போனைப்போட்டு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.

‘2 கோடிக்குக் கம்மியான சம்பளம்னா வேற நடிகையைப் பாருங்க. நான் பண்ண மாட்டேன்’

– என்று மூஞ்சியில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு பட்டென போனை கட் பண்ணிவிட்டாராம் நயன்தாரா.

இப்படியொரு ‘மரியாதையை’ நயன்தாராவிடமிருந்து எதிர்பார்க்காத தன்மான சிங்கம், தி.நகரே கிடுகிடுக்கும்படி கர்ஜிக்க ஆரம்பித்துவிட்டதாம்.

இறுதியாக, ‘நயன்தாராவுக்குக் கொடுக்கிற சம்பளத்தில நாலு படம் எடுக்கலாம். வேற நடிகையைப் பாருங்க’ – என்று பாண்டிராஜிடம் சொல்லி இருக்கிறார்.

விஷயம் சிம்புவின் காதுக்குப் போக… பல வருஷத்துக்கப்புறம் பழையசோறு சாப்பிடலாம் என்ற கனவில் மண்ணை அள்ளிப்போட்டுவிடுவார் போலிருக்கிறதே என்று கடுப்பாகிவிட்டார் சிம்பு.

இது சம்மந்தமாக அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மகன் ஜெயித்தால் பழைய சோறு.

அப்பா ஜெயித்தால் பர்கர்.